அயனாவரத்தில் பிரபல ரவுடி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு.. பெண் எஸ.ஐக்கு குவியும் பாராட்டுக்கள்!!

 
chennai chennai

சென்னை அயனாவரம் பகுதியில் ரவுடி பெண்டு சூர்யாவை துப்பாக்கியால் சுட்டு பிடித்த பெண் எஸ்.ஐ மீனாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

கடந்த 20-ம் தேதி அதிகாலை அயனாவரத்தில் வாகன தணிக்கையில் உதவி ஆய்வாளர் சங்கர் ஈடுப்பட்டிருத்தார். அப்போது இருசக்கர வாகானத்தில் வந்த 3 பேர் கொண்ட மர்மக்கும்பல் இரும்பு கம்பியால் தாக்கி விட்டு தப்பினர். 

gun

இருசக்கர வாகனத்தில் தப்பியோடிய 3 பேரில் கௌதம் மற்றும் அஜித் ஆகிய இருவரையும் அயனாவரம் பெண் எஸ்.ஐ மீனா தலைமையிலான போலீசார் கைது செய்த நிலையில் ரவுடி பெண்டு சூர்யா என்பவர் தலைமறைவான நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் தனது அக்கா வீட்டில் பதுங்கியிருந்த சூர்யாவை போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து அயனாவரம் நியூ ஆவடி சாலையில் திடீரென பெண்டு சூர்யா, கத்தியால் போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோடினார். கத்திக்குத்தில் காவலர்கள் இருவர் படுகாயம் அடைந்தனர். தப்பியோடிய ரவுடி பெண்டு சூர்யாவை அயனாவரம் காவல் உதவி ஆய்வாளர் மீனா முழங்காலில் சுட்டு பிடித்தார்.

chennai

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ரவுடி பெண்டு சூர்யாவுக்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருச்சியில் ரவுடிகள் துரை, சோமுவை தொடர்ந்து சென்னையிலும் போலீசார் ரவுடியை சுட்டு பிடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web