பாயசத்தில் விஷம்.. கடன் கொடுத்தவரை காலிபண்ண கும்பல்.. தேனி நீதிமன்றம் அதிரடி

 
Bodi

கடன் கொடுத்தவரின் குடும்பத்தை, பாயசத்தில் விஷம் கலந்து கொடுத்து கொல்ல முயன்ற கும்பலுக்கு சிறைத் தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்டம் போடி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரிடம் 2013-ம் ஆண்டு 4.70 லட்சம் ரூபாய் கடனாக பெற்றிருந்தார். ஆனால், கடனைத் திரும்பச் செலுத்தாமல் காலதாமதம் செய்து வந்தார். ராஜ்குமார் தன் பணத்தைத் தொடர்ச்சியாக திரும்பத் தருமாறு கேட்டு வந்ததால் ஆத்திரமடைந்த சுரேஷ், ராஜ்குமாரிடம் பணத்தைத் தரமுடியாது எனக் கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதையடுத்து சுரேஷ் தன்னுடைய பெண் தோழியான கீதா என்பவருடன் சேர்ந்து, பணப் பிரச்னையில் இருந்து மீள ராஜ்குமாரின் குடும்பத்தாரை மொத்தமாக கொலைசெய்ய திட்டமிட்டனர். அதன்படி ராஜ்குமார், அவரின் மனைவி செல்வி, மகள் செளந்தர்யா, மகன்கள் கிருஷ்ண குபேந்திரன், விக்னேஸ்வரன் ஆகியோருக்கு பாயசத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ய சுரேஷ், கீதா மற்றும் அவர்களின் நண்பர்களான காமாட்சி, விஜயராம், கணேசன் ஆகியோர் சேர்ந்து முடிவெடித்தனர்.

Dead

ராஜ்குமார் வசிக்கும் பகுதியில் உள்ள கீதாவின் வீட்டு வாசலில், ராஜ்குமாரின் 11 வயது மகள் செளந்தர்யா விளையாடி கொண்டிருந்தார். முதலில் அவரை வீட்டிற்குள் அழைத்த கீதா, கோவில் பிரசாதம் எனக் கூறி கொடுத்தார். விஷம் கலந்த பாயசம் என்பதை அறியாத அந்த குழந்தை, அதைக் குடித்து உயிரிழந்தது. இதையடுத்து ராஜ்குமாரின் வீட்டிற்கு சென்ற கீதாவும், சுரேஷூம், ராஜ்குமார், அவரின் மனைவி குழந்தைகளுக்குப் பாயசம் கொடுத்தனர். அதை கோவில் பிரசாதம் என அவர்களும் குடித்தனர்.

ஆனால் ராஜ்குமார் பாயசத்தில் விஷம் கலந்திருப்பதை அறிந்து, துப்பிவிட்டார். அதையடுத்து, அவர் உட்பட அனைவரையும் குடிக்குமாறு கட்டாயப்படுத்தி மிரட்டினர். மரண பயத்தில் வீட்டில் இருந்து வெளியேறி ராஜ்குமார் குடும்பத்தினர், தப்பி மருத்துவச் சிகிச்சை எடுத்தனர். இதையடுத்து சுரேஷ் தரப்பு மீது அளித்த புகாரில், சுரேஷ், கீதா, காமாட்சி, விஜயராம், கணேசன் ஆகிய 5 பேர்மீது போடி போலீசார் வழக்கு பதிவுசெய்து, அவர்களைக் கைது செய்தனர்.

Theni Court

இந்த வழக்கு விசாரணையில் இருந்த காலத்தில் கீதா, காமாட்சி ஆகியோர் உயிரிழந்தனர். தேனி மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் விசாரணை முடிந்த நிலையில், சுரேஷுக்கு ஆயுள் தண்டனை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம், விஜயராமிற்கு 10 ஆண்டுகள் சிறை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. கணேசன் இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

From around the web