மர்ம பொருள் வெடித்து ப்ளஸ்-2 மாணவன் பரிதாப பலி.. சென்னையில் அதிர்ச்சி!

 
Chennai

சென்னை கொளத்தூரில் மர்மப் பொருள் வெடித்து ப்ளஸ்-2 மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அடுத்த கொளத்தூர் ஜி.கே.எம் பகுதியில் வசித்து வருபவர் ஹரிஹரன். இவரது மகன் ஆதித்ய பிரணவ் (17). இவர் ப்ளஸ்-2 வகுப்பு படித்து வந்தார். ஹரிஹரன் தனது மகன் பிரணவுடன் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு புதிய வீட்டை வாங்கி குடி பெயர்ந்துள்ளார். ஆதித்ய பிரணவ், அறிவியல் பயின்று வரும் மாணவர் என்பதால், அடிக்கடி வீட்டில் ஏதாவது ஒரு ஆராய்ச்சிகளைச் செய்து கொண்டிருப்பார் என கூறப்படுகிறது.

dead-body

கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீட்டில் ஒரு விதமான ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த போது, கரும்புகை வந்துள்ளது, அதனை அக்கம் பக்கத்தினர் அதனைப் பார்த்து எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று மதியம் 3 மணியளவில் ஆதித்யப் பிரணவ் வீட்டிலிருந்து பயங்கர வெடி சத்தம் கேட்டுள்ளது. இதில் அருகில் இருந்த மூன்று வீடுகளும் சேதம் அடைந்தன. இந்த விபத்தில் ஆதித்ய பிரணவ் வீடு முழுவதும் சேதமடைந்து சம்பவ இடத்திலேயே ஆதித்த பிரணவ் பரிதாபமாக உயிரிழந்தார்.

Police

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திறெகு விரைந்து வந்த, போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் ஆதித்ய பிரணவ் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தசம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web