ப்ளஸ்-2 தேர்வு எழுதிய மாணவி தூக்கிட்டு தற்கொலை.. தேர்வில் மதிப்பெண் குறைந்தால் விபரீத முடிவு

 
Ramanathapuram

ராமநாதபுரம் அருகே ப்ளஸ்-2 தேர்வு எழுதிய மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் அருகே உள்ள வைரவன்கோவில் பகுதியில் வசித்து வருபவர் ஜெயவேல். இவரது மகள் சௌமியா என்ற கிஷோர்னி (17). இவர், வண்ணாங்குண்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ்-2 படித்து தேர்வு எழுதினார். இந்நிலையில், ப்ளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று காலை வெளியாகின. தேர்வில் சௌமியா தேர்ச்சி பெற்றார். ஆனால், அவர் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காததால் மனவருத்தத்தில் இருந்தார்.

suicide

இதனால் மாணவி சௌமியா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கேணிக்கரை போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மாணவி உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கை அருகே உள்ள பூசேரி பகுதியைச் சேர்ந்தவர் சத்யா (17). ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ்-2 படித்து வந்தார். தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் குறைவான மதிப்பெண் பெற்றிருந்ததாக கருதிய சத்யா மனம் உடைந்து விஷம் குடித்துள்ளார்.

Kenikkarai PS

உயிருக்கு ஆபத்தான நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சத்யா அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

From around the web