தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு.. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

 
Petrol

தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையானது இன்று (டிச. 8) உயர்ந்துள்ளது.

இந்தியாவில் சில காலத்திற்கு முன்புவரை, மாதத்தின் முதல் மற்றும் பதினாறாம் தேதிகளில் மட்டும் இருமுறை பெட்ரோல் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வந்தது. இந்த முறை அமலில் இருந்தபோது, பல்வேறு பிரச்சினைகளின் காரணமாக, பெட்ரோல் விலையில் மாற்றத்தை செய்வதில் எண்ணெய் நிறுவனங்கள் ஏராளமான இடையூறுகளை சந்திக்க நேர்ந்தது. ஆனால், தற்போது சென்னையில் பெட்ரோல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. இதை மாறும் எரிபொருள் விலை என்கிறார்கள். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கு தகுந்தபடி, சென்னையில் பெட்ரோல் விலை உயரும் அல்லது இறங்கும்.

Petrol

கடந்த ஆண்டு முதல் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் விற்பனையான நிலையில் நேற்று (டிச.7) பெட்ரோல், டீசல் விலையானது சற்று குறைந்தது. மிக்ஜாம் புயலின் தாக்கத்தில் இருந்து மீண்டு வரும் மக்களுக்கு விலை குறைவு சற்று நிம்மதியை கொடுத்தது. ஆனால் இந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. அந்த வகையில் இன்று (டிச.8) சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 17 காசுகள் உயர்ந்துள்ளது.

அதன் படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு, சென்னை, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திருவாரூர், திருப்பூர், திருவள்ளூர், தூத்துக்குடி, விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அமலாகி இருக்கிறது.

Petrol

அதே போல டீசல் விலையும் லிட்டருக்கு 16 காசுகள் உயர்ந்து ரூ. 94.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த திடீர் உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

From around the web