செந்தில் பாலாஜி க்கு எதிரான மனு! உச்சநீதிமன்றம் தள்ளுபடி!!

 
Senthil-Balaji

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, ஓராண்டு சிறைவாசத்திற்குப் பின் செப்டம்பர் 26ம் தேதி உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

ஜாமீன் கிடைத்த அடுத்தநாளே செந்தில் பாலாஜியை, மீண்டும் அமைச்சராக்கினார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பாஜக தரப்பினர் இதுகுறித்து விமர்சனம் செய்தனர்.

செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மறு சீராய்வு மனுவை பாலாஜி என்பவர் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

From around the web