அப்பல்லோவில் அனுமதி... கார்த்தி சிதம்பரத்திற்கு என்னாச்சு?
Oct 8, 2025, 07:35 IST
முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கார்த்தி சிதம்பரத்திற்கு சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் , “கார்த்தி சிதம்பரத்திற்கு இன்று (நேற்று) காலை மருத்துவர் சந்தோஷ் ஆனந்த் தலைமையில் மருத்துவ குழு சிறிய அறுவை சிகிச்சை செய்தனர். தற்போது அவர் உடல்நிலை நன்றாக உள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
என்ன அறுவை சிகிச்சை, எப்போது மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் போன்ற தகவல் எதுவும் குறிப்பிடப்படவில்லை;
