பிரபாகரனுக்கு வழிகாட்டியே பெரியார் தான்! சொன்னது சீமான்!!

 
Seeman

தந்தை பெரியாரை சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றது. இந்நிலையில் சீமான் பேசிய பழைய வீடியோ ஒன்றை மூத்த ஊடகவியலாளர் செந்தில்வேல் வெளியிட்டுள்ளார்.

”இந்த வீடியோ சிக்கும் என்று சீமான் எதிர்பார்த்திருக்க மாட்டார்.. இப்படி மாட்டிக்கிட்டீங்களே சீமான்.. பெரியார்தான் தங்கள் போராட்டத்திற்கே வழிகாட்டி என பிரபாகரனே சீமானிடம் சொன்னாராம்.. அப்புறம் என்ன டேசுக்கு இப்ப இப்படி பேசனும்” என்று குறிப்பிட்டு செந்தில்வேல் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில் தந்தை பெரியார் தான் தங்களுக்கு வழிகாட்டி என்று விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் தன்னிடம் சொன்னதாக சீமான் கூறியுள்ளார்.


 

From around the web