முருகன் மாநாட்டில் பெரியார் அவதூறு.. விஜய் ஏன் எதிர்க்கவில்லை? திருமாவளவன் கேள்வி!!

 
நீதிமன்றங்களில் அரசியல் தலையீடு மிக அதிகமாகவே உள்ளது! – திருமாவளவன்

மதுரையில் இந்து முன்னணி நடத்திய  முருகன் மாநாட்டில் பெரியார் மற்றும் அண்ணா குறித்து அவதூறாக காணொலி ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்வில் அதிமுக முன்னாள் அமைச்சர்களும் பங்கேற்று இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திமுகவினரும் கூட்டணி கட்சிகளும் உடனடியாக கடும் கண்டனம் தெரிவித்தனர். இரண்டு நாட்கள் கழித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம் அளித்தார். ஆனால் பெரியாரை கொள்கைத் தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளதாகக் கூறும் தவெக தலைவர் நடிகர் விஜய் பெரியார் குறித்த இந்த அவதூறு வீடியோ குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்க வில்லை.

இதைச் சுட்டிக்காட்டியுள்ள விசிக தலைவர் தொல். திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். இது வரையிலும் நடிகர் விஜய் ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை என்று கேட்டுள்ளார் திருமாவளவன். தவெகவுடன் விசிக கூட்டணி அமைக்கப்போவதாக சிலர் கூறி வரும் நிலையில் விஜய்க்கு திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web