கிளாம்பாக்கத்தில் அலைமோதும் மக்கள்! 1200 கூடுதல் பேருந்துகள்!

பொங்கல் திருநாளை முன்னிட்டு தொடர் விடுமுறை என்பதால், சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர். தென்னக ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ள அனைத்து சிறப்பு ரயில்களிலும் முன்பதிவு நிரம்பிவிட்டது. ங் செய்யாத பெட்டிகளில் வாசலில் நின்று கொண்டு செல்லும் அளவுக்கு ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது.
அதே வேளையில் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திலும் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது, நாள்தோறும் 2 ஆயிரம் பேருந்துகள் அங்கிருந்து இயக்கப்படும் நிலையில், பொங்கல் திருநாளை முன்னிட்டு கூடுதலாக 1200 பேருந்துகள் இயக்கப்படுகிறது. வெள்ளி, சனிக் கிழமைகளில் 3 லட்சம் மக்கள் கிளாம்பாக்கத்திலிருந்து சொந்த ஊருக்குச் சென்றுள்ளார்கள்.
இன்று ஞாயிற்றுக் கிழமையும் ஒன்றரை லட்சம் மக்கள் கிளாம்பாக்கத்திலிருந்து சொந்த ஊருக்கு கிளம்பிச் செல்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தால் சென்னை நகருக்குள் தொலை தூரப் பேருந்துகளின் நெரிசல் குறைக்கப்பட்டுள்ளது முக்கியமானதாகும்.