மக்களே உஷார்.. தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்.. வானிலை மையம் அலெர்ட்!

 
Heat wave

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (ஏப்ரல் 10) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

நாளையும் (ஏப்ரல் 11) தென் தமிழ்நாடு, டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று  சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

நாளை மறுநாள் (ஏப்ரல் 12) தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

heat-wave

ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் தென் தமிழ்நாடு, டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று  சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

ஏப்ரல் 15-ம் தேதி தென் தமிழ்நாடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழ்நாடு மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 16-ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

ஏப்ரல் 10 முதல் 14-ம் தேதி வரை அடுத்த 5 தினங்களில் தமிழ்நாடு, புதுவை மற்றும்எ காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 செல்சியல் வரை படிப்படியாக குறையக்கூடும்.

Heat wave

இன்றும் நாளையும் அதிகபட்ச வெப்பநிலை தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் 2-3 செல்சியல் இயல்பை விட அதிகமாகவும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை தமிழ்நாடு உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 37-40 செல்சியல் மற்றும் கடலோரப்பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் 33-37 செல்சியல் இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

From around the web