ரேஷன் கடைகளில் யுபிஐ மூலம் பணம் செலுத்தலாம்.. புதிய நடைமுறை அமல்!

 
Ration

ரேஷன் கடைகளில் யுபிஐ மூலம் பணம் செலுத்தலாம் என்ற அறிவிப்பை தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் ரேஷன் கடைகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் பணம் இல்லாத பணபரிவர்த்தனை வேகமாக வளர்ந்து வருகிறது. இதற்கு முன்பு எல்லாம் ஏடிஎம்களில் பணம் எடுக்க நீண்ட நேரம் எல்லாம் நிற்க வேண்டும். ஆனால் தற்போது கையில் வைத்திருக்கும் ஸ்மார்ட் போனில் உள்ள ஜிபே, பேடிஎம் போன்ற யுபிஐ செயலிகள் மூலம் யாருக்கு வேண்டுமானாலும் எளிதில் பணம் அனுப்பி விடலாம்.

மிகப்பெரிய வணிக வளாகங்கள் முதல் சாலையோரம் இருக்கும் தெருவோரக்கடைகள் வரை அனைத்து கடைகளிலும் யுபிஐ மூலம் பண பரிவர்த்தனை செய்யும் வகையில் தற்போது நவீன மயமாகி உள்ளது. இவ்வாறு அனைத்து கடைகளிலும் இருக்க அனைத்து ரேஷன் கடைகளிலும் யுபிஐ மூலம் பணம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

UPI

அதன்படி முதலில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதி சோதனை முறையில் தொடங்கப்பட்டது. மக்கள் அதற்கு நல்ல வரவேற்பு அளித்ததால் இந்த திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. மேலும் சோதனை முயற்சியாக பல்வேறு ரேஷன் கடைகளில் செயல்படுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள 562 கடைகளில் யுபிஐ மூலம் பணம் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் யுபிஐ மூலம் பணம் செலுத்தி ரேஷன் பொருட்களை வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டமானது விரைவில் அனைத்து ரேஷன் கடைகளிலும் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

chennai

சென்னையில் ஒரு கடையின் முன்பு மொபைல் முத்தம்மா என்ற பதாகை வைக்கப்பட்டுள்ளது. அதில் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்டுள்ளது. அதில் இருக்கும் வசனங்கள் பின் வருமாறு, பர்சை கையில் வைத்திருக்க மாட்டார்-அதனால் திருட்டு பயம் இல்லை! பேடிஎம் மூலமாக பொருட்கள் வாங்குவார்-சில்லறை பிரச்சினை இல்லை! உடனடி பணப்பரிமாற்றம்- நேரத்தை சேமிக்கிறார்! நீங்களும் மொபைல் முத்தம்மா ஆகுங்கள்! இப்போது உங்கள் மொபைல் மூலமாக அனைத்து நியாய விலைக்கடைகளிலும் அனைத்து பொருட்களையும் வாங்கலாம். பேடிஎம் வசதி உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web