எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி! ஓங்கி அடிச்ச முதலமைச்சர் ஸ்டாலின்!!

 
semmozhi semmozhi

மும்மொழிக் கொள்கை, இந்தித்திணிப்பு என்று தமிழ்நாடு கொந்தளிப்பு நிலைக்குச் சென்று கொண்டிருக்கும் வேளையில்  உலகத் தாய்மொழி நாளைக் கொண்டாடும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில் எம்மொழிக்கும் சளைத்தல்ல எம் மொழி என்று கூறியுள்ளார் முதலமைச்சர்.

”எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி! இலக்கியங்களில் புதைந்திருந்த வரலாற்றினை மண்ணில் அகழாய்ந்து நிறுவி வருகிறோம்! அகத்திலும் புறத்திலும் அன்பும் வீரமும் கொண்டு வாழும் நற்றமிழர் தாய்மொழி, போற்றுதலுக்குரிய பழமை உடைய மொழி மட்டுமல்ல; பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்கும் ஆற்றல்கொண்ட செம்மொழி! உலகெங்கும் பரவட்டும் நம் உயர்தனிச் செம்மொழி” என்று குறிப்பிட்டு வாழ்த்துச் செய்தியை பதிவு செய்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இந்தப்பதிவுடன் கலைஞர் எழுதி ஏ.ஆர். ரஹ்மான் இசைமைப்பில் தமிழ்த்திரையுலக பின்னணிப் பாடகர்கள் அனைவரும் இணைந்து பாடி, உலகத்தமிழ் மாநாட்டில் வெளியிடப்பட்ட செம்மொழியாம் தமிழ் மொழி பாடல் வரிகளையும் படத்துடன் இணைத்துள்ளார் முதலமைச்சர்.

இந்தித்திணிப்புக்கு எதிரான சூழல் நிலவி வரும் வேளையில் எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி என்ற முதலமைச்சரின் கூற்று பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.


 

From around the web