தமிழ்நாடு முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!! மதுப்பிரியர்கள் அதிர்ச்சி

 
Tasmac

வடலூர் இராமலிங்கர் நினைவு நாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இன்று (பிப். 5) டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை தமிழ்நாடு வாணிப கழகம் நடத்தி வருகிறது. இந்நிறுவனம் தமிழ்நாட்டில் மதுபானங்களை மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம் செய்யும் உரிமைத்தை பெற்றுள்ளது. தமிழ்நாடு அரசின் வருவாய் ஈட்டும் முக்கிய காரணியாக டாஸ்மாக் செயல்பட்டு வருகிறது.

TASMAC

தற்போது, 5,425 டாஸ்மாக் கடைகள் தமிழ்நாட்டில் இயங்கி வருகின்றன. தினந்தோறும் சராசரியாக ரூ.100 கோடி மதிப்பிலான சரக்கு வகைகள் விற்பனையாவதாக கூறப்படுகிறது. அதேபோல், பண்டிகை காலங்களான தீபாவளி, பொங்கல் வார விடுமுறை நாட்களில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை அதிகமாக நடைபெறுவது வழக்கம்.

1874-ம் ஆண்டு தை 19-ம் தேதி ஜனவரி 30-ம் நாள் பூச நட்சத்திரமும் பௌர்ணமியும் கூடிய நல்ல நாளில் வள்ளலார் ஜோதி வடிவாக கலந்தார். அந்த அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணையை இன்றைக்கும் அனைவரும் போற்றி வணங்கி வருகின்றனர். ஜோதி திருவிழா வடலூரில் மூன்று நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு இன்று (பிப். 5) ஜோதி திருவிழா நடைபெற உள்ளது.

TASMAC

இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் பார்கள், கிளப்புகளைச் சேர்ந்த பார்கள், ஓட்டல்களைச் சேர்ந்த பார்கள் உள்ளிட்டவை கண்டிப்பாக மூடப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. உத்தரவை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web