வாய்ப்பு கேட்ட ஓ.பி.எஸ்.. மறுத்த எஸ்.பி.வேலுமணி!! சட்டமன்ற பரபரப்பு!!
Mar 19, 2025, 18:15 IST
தமிழ்நாடு சட்டமன்ற நிதிநிலை அறிக்கைக் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. கேள்வி நேரத்தில் தனக்கு பேச வாய்ப்பு வழங்க வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்தார். அதற்கு சபாநாயகர் அப்பாவு, அதிமுக கொறடா அனுமதி பெற்று பேசலாம் என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக கொறடாவாக உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதிமுக சார்பில் பேசுவதற்கு ஒ.பன்னீர்செல்வத்திற்கு அனுமதி வழஙக முடியாது என்று தெரிவித்துள்ளார். சபாநாயகர் அனுமதித்தால் சுயேட்சையாக கருதப்பட்டே பேச முடியும். இது கட்சித் தாவல் தடைச் சட்டத்திற்குள் வருமா? அல்லது சட்டமன்றக் கூட்டத்தில் பேசாமல் வெளிநடப்பு செய்வாரா ஒ.பி,எஸ் என்பது விரைவில் தெரிய வரும்.
