எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு கூச்சமே இல்லை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கு!!

 
CM Stalin

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எந்தக் கூச்சமும் இல்லாமல் இஸ்லாமியர்களின் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னையில் திமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு சார்பில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று அண்ணா, கலைஞர் காலம் தொட்டு திமுக அரசு இஸ்லாமியர்களுக்கு ஆற்றிவரும் பணிகளை சுட்டிக் காட்டினார். அண்ணாவும் கலைஞரும் முதன் முதலாகச் சந்தித்ததே இஸ்லாமிய நிகழ்ச்சியில், கலைஞரின் இஸ்லாமிய நண்பர்களால் தான் என்று நினைவு கூர்ந்தார்.

சி.ஏ. ஏ.சட்டத்தை அதிமுக ஆதரித்து வாக்களித்து விட்டு அந்த சட்டத்தால் எந்த இஸ்லாமியர்களுக்கும் பிரச்சனை என்று சொன்னவர் தான் எடப்பாடி பழனிசாமி. அதிமுக எதிர்த்து வாக்களித்து இருந்தால் அந்த சட்டமே நிறைவேறி இருக்காது. இப்போது எந்த கூச்சமும் இல்லாமல் இஸ்லாமியர்களின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். ஆனால் இஸ்லாமிய மக்கள் எடப்பாடி பழனிசாமியின் துரோகத்தை மறக்கவோ மன்னிக்க மாட்டார்கள்.

வக்ஃப் வாரியச் சட்டத்தை மாற்றுவதற்கு பாஜக அரசு முயன்று வருகிறது.நாடாளுமன்றத்தில் திமுகவும் தோழமைக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். ஒரு வேளை சட்டம் நிறைவேற்றப்பட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

From around the web