11 புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

 
DMK

நாடாளுமன்ற தேர்தலில் திமுக போட்டியிடம் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

இந்தியாவில் விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும் நிலையில், இது குறித்த அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. மொத்தம் 7 கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும் நிலையில், ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதில் தமிழ்நாட்டில் முதல் கட்டத்திலேயே நாடாளுமன்றத் தேர்தல் நடக்கிறது. தமிழ்நாட்டில் இன்னும் ஒரு மாதத்தில் தேர்தல் நடக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் தங்கள் பிரச்சாரத்தைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையே திமுக தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் கனிமொழி எம்பி தலைமையில் தயாரிக்கப்பட்ட திமுக தேர்தல் அறிக்கையின் இன்று காலை 10 மணிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். இதனை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்றத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டார்.

DMK

இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற தேர்தலில் 21 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை திமுக இன்று வெளியிட்டுள்ளது. முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வேட்பாளர்கள் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளார்.

திமுக வேட்பாளர் பட்டியல்:

வட சென்னை - கலாநிதி வீராசாமி

தென் சென்னை - தமிழச்சி தங்கபாண்டியன் 

மத்திய சென்னை - தயாநிதிமாறன் 

ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு 

காஞ்சிபுரம் (தனி) - செல்வம் 

அரக்கோணம் - எஸ்.ஜெகத்ரட்சகன் 

வேலூர் - கதிர் ஆனந்த் 

தர்மபுரி - அ.மணி

DMK

திருவண்ணாமலை - சி.என்.அண்ணாதுரை 

ஆரணி - தரணி வேந்தன் 

கள்ளக்குறிச்சி - மலையரசன் 

சேலம் - செல்வ கணபதி

ஈரோடு - பிரகாஷ் 

நீலகிரி (தனி) - ஆ.ராசா 

கோவை - கணபதி ராஜ்குமார் 

பொள்ளாச்சி - கே.ஈஸ்வரசாமி 

பெரம்பலூர் - அருண்நேரு 

தஞ்சாவூர் - முரசொலி

தேனி - தங்க தமிழ்செல்வன் 

தூத்துக்குடி - கனிமொழி 

தென்காசி (தனி) - ராணி ஸ்ரீகுமார்

From around the web