ஒன்னாங்கிளாஸ் மாணவர்கள் 3 மொழிகளை பேசனுமாம்! இது என்ன நாட்டாமை?

 
Modi Trump

பின்னாடி உட்காந்து இருக்கிற 2 பேர் யாரு..?

ஒருத்தர்....அமெரிக்க மோடி பேசும் அமெரிக்கன் ஸ்டைல் இங்கிலிஷை இந்தியனுக்கு புரியும்படி இந்திய இங்கிலிஷாக மாற்றி சிறு சிறு வாக்கியமாக உடைத்துப் பிரித்துக் கொடுக்கிற தாய்மொழி புலமையற்ற அமெரிக்க வாழ் இந்தியர். 

இன்னோருத்தர்...அந்த இந்திய ஸ்டைல் இங்கிலிஷை அப்படியே ஹிந்தியாக மொழி மாற்றி இந்திய டிரம்புக்கு சொல்லும் ஓரளவுக்கு இங்கிலிஷும் ஹிந்தியும் தெரிந்த ஹிந்திக்காரர்.

ஆக...
1. அமெரிக்க மோடிக்கும் தெரிந்தது ஒரேயொரு மொழி, அதாவது இங்கிலீஷ் மட்டுமே எழுதப் படிக்க பேசத் தெரியும். இந்தியன் இங்கிலிஷ்க்காரர் மூலம் இந்தியை மொழியாக்கம் செய்து புரிந்து கொள்கிறார். 

2. இந்திய டிரம்புக்கு ... முன்பு முதலமைச்சர் ஆக இருந்தபோது, இந்தி & குஜராத்தி என்று இரண்டு மொழிகள் பேசியவர், இப்போது பிரதமரான பின்னர் பெரும்பாலும் ஒரேயொரு மொழி மட்டுமே பேசுகிறார். 

இவர்கள் நாட்டையே ஆளுவார்களாம்!

ஆனால்...

நம் தமிழ்நாட்டில் உள்ள ஒன்னாங்கிளாஸ் பள்ளி மாணவர்கள் மட்டும், 3 மொழிகளை பேச வேண்டுமாம். அப்போது தான் 2052 கோடி கல்வி நிதியை தமிழ் நாட்டுக்குத் தருவார்களாம்.

கேனைப்பய ஊருல கிறுக்கப்பய நாட்டாமை!!!

- அ.சிவகுமார்

From around the web