மதுரை கள்ளழகரை பார்க்க வந்த மேலும் ஒருவர் உயிரிழப்பு.. சித்திரை திருவிழாவில் சோகம்!

 
Madurai

மதுரை சித்திரை திருவிழாவை பார்க்க வந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா 12 நாட்கள் நடக்கும். மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவை காண மதுரை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் குவிந்து வருகின்றனர்.

Madurai

இந்த நிலையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை பார்க்க வந்த 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் ஆழ்வார்புரம் அருகே உள்ள வைகை ஆற்று தடுப்பணையில் நீரில் மூழ்கி சடலமாக கிடந்துள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சடலத்தை மீட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட நபர் குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் உயிரிழந்த நபர் யார் எப்படி உயிரிழந்தார், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தாரா அல்லது உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தாரா என்பது குறித்து மதுரை விளக்குத்தூண் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Police

முன்னதாக கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை பார்க்க வந்த 23 வயது இளைஞர் சூர்யா உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

From around the web