கிணற்றுக்குள் பாய்ந்த ஆம்னி வேன்.. 8 பேரில் 3 பேர் உயிருடன் மீட்பு!!
May 17, 2025, 22:06 IST

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள மீரான் குளத்தில் ஆம்னி வேன் ஒன்று 50 அடி கிணற்றுக்குள் பாய்ந்தது. டிரைவர் உள்பட 8 பேர் இந்த வேனில் பயணம் செய்தனர்.
8 பேர்களில் 3 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 4 பேர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. ஒன்றரை வயது குழந்தையின் உடலைத் தேடும் பணி தொடர்கிறது.
இந்த சம்பவம் எப்படி நடந்தது என்று முழுமையான விவரம் தெரியவில்லை. சாலை ஓரத்தில் சுற்றுச்சுவர் இல்லாத வயல்வெளிக் கிணறு என்பதால், நிலை தவறிய வேன் கிணற்றுக்குள் பாய்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. சாத்தான்குளம் சுற்றுவட்டாரத்தில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.