அடுத்தடுத்து மோதிய ஆம்னி பேருந்துகள்! 45 பேர் படுகாயம்!!

 
omni bus

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திடீரென்று நின்ற லாரி மீது அடுத்தடுத்து 4 ஆம்னி பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளாகியது. சென்னையில் இருந்து திருச்சி நோக்கி, லாரி ஒன்று அதிகாலையில் சென்று கொண்டிருந்தது. அதன் பின்னாலேயே சென்னையில் இருந்து மதுரை நோக்கி 4 ஆம்னி பேருந்துகள் அடுத்தடுத்து சென்றுகொண்டிருந்தன.

இந்த சூழலில் முன்னால் சென்ற லாரி திடீரென பிரேக் பிடித்ததால், அதன் பின்னால் ஒன்றன்பின் ஒன்றாக வந்த 4 ஆம்னி பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்து நிகழ்ந்ததாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. 

பேருந்தில் பயணம் செய்த 45 பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் வேப்பூர் மற்றும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து சம்பவத்தால் வேப்பூர் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது 4 ஆம்னி பேருந்துகள் அடுத்தடுத்து மோதி கொண்ட சம்பவம்  மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

From around the web