ஸ்டான்லி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு ‘பழையசோறு’.. 80% குடல் நோய்களுக்கு அருமருந்து..!

 
chennai

மனிதர்களுக்கு ஏற்படும் 80 சதவீதம் குடல் நோய்களுக்கு பழைய சோறு நல்ல தீர்வாக அமைவதாக சென்னை ஸ்டான்லி மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நம் அன்றாட உணவுமுறையில் மிகவும் அவசியமான உணவாக பழைய சோறு இருக்க வேண்டும். எல்லா காலநிலைக்கும் பொருந்தும் உணவு இது. குறிப்பாக, வெயில் காலத்தில் தினமும் காலையில் பழைய சோறு சாப்பிடுவதால் பல நன்மைகள் உள்ளன. ஆனால், பழைய சோறு எப்படி செய்ய வேண்டும், அதை எப்படிச் சாப்பிட வேண்டும் என தெரிந்துகொண்டு சாப்பிட்டால்தான் அதன் மூலம் நன்மைகள் கிடைக்கும்.

வயிற்றில் இருக்கும் புண்களை ஆற்றுகிறது. அல்சர் இருப்பவர்கள் பச்சை மிளகாயை எடுத்துக் கொள்ளாமல் வெங்காயத்துடன் இந்த பழங்கஞ்சியை குடிக்கலாம். இது நோய் எதிர்ப்பாற்றலை தருகிறது. மூளை செல்களுக்கு உகந்தது. இரவு முழுக்க அந்த சாதம் நீரில் ஊறினால்தான் சத்து கிடைக்கும். ஒரு சிலர் சாதத்தில் இரவே நிறைய தண்ணீர் ஊற்றிவிட்டு காலையில் அந்த தண்ணீரை வடித்துவிட்டு புதிய தண்ணீரை ஊற்றி குடிப்பர்.

Pazhaya Soru

அது மிகவும் தவறானது, பலனே அளிக்காது. ஏழைகள், வறுமையில் இருப்பவர்கள் மட்டுமே இந்த பழைய சோற்றை சாப்பிடுவார்கள். இன்றும் ஹோட்டல்களில் கூட பழைய சோறு, கூழ், களி உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகிறது. அதிலும் இந்த பழைய கஞ்சியை மண் பாண்டத்தில் செய்யப்பட்ட பாத்திரத்தில் வைத்து சாப்பிடலாம்.

இந்த பழைய சோறு தற்போது சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்படுகிறது. அதில் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைத்த பலருக்கு அறுவை சிகிச்சையே தேவை இல்லை என பரிந்துரைக்கும் அளவுக்கு அளப்பரிய மாற்றத்தை இந்த பழைய சோறு ஏற்படுத்துகிறதாம்.

இதுகுறித்து இரைப்பை குடல் அறுவை சிகிச்சை தலைவர் ஜஸ்வந்த் கூறுகையில் 20க்கும் மேற்பட்டோருக்கு குடலில் உள்ள அலர்ஜி, புண்கள் காரணமாக குடல் புண்ணாகி, அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை இருந்தது. ஆனால் பழைய சோற்றை கொடுத்து அறுவை சிகிச்சையே இல்லாமல் அவர்களை காப்பாற்றி வருகிறோம்.

Pazhaya Soru

இதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் ரூ 2.77 கோடி நிதியுதவி பெறப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. ஸ்டான்லி மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளுக்கு அவர்களின் உணவு பழக்கத்தால்தான் குடல் நோய் வந்தது தெரியவந்தது. இதனால் சிறிய மண் பானையில் பழைய சோற்றை கொடுத்தோம். அவர்கள் தற்போது உடல்நலம் பெற்றுள்ளனர்.

பழைய சோற்றில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் எத்தனை சதவீதம் உள்ளன என்பதை துல்லியமாக காண்பதற்கான ஆராய்ச்சிகள் நடக்கின்றன. இந்த கஞ்சியை நீரிழிவு நோயாளிகள் சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். பழைய மண் சட்டியில் வைத்து சாப்பிட்டால் அது எளிதில் ஜீரணமாகும். 80 சதவீத குடல் நோய்களுக்கு அருமருந்தாக பழைய சோறு உள்ளதாக மருத்துவர் ஜஸ்வந்த் தெரிவித்துள்ளார்.

From around the web