அடேங்கப்பா.. மோடி அரசின் தீபாவளிப் பரிசு!! எச்.ராஜா சொல்றது என்ன தெரியுமா?
செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதல் நாடு முழுவதும் திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி வரி விகிதம் அமல்படுத்தப்பட உள்ளது. 5 சதவீதம் மற்றும் 18 சதவீதம் என இரண்டு அடுக்கு வரிகளும், சிகரெட், மதுபானம் உள்ளிட்ட பொருட்களுக்கு 40 சதவீதம் வரியும் செயல்படுத்தப்பட உள்ளது,
பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்களுக்கு 5 சதவீத வரிவிதிப்பு மூலம் 13 சதவீதம் வரி சேமிப்பு கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இது குறித்து பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பிரதமர் மோடியின் தீபாவளிப் பரிசு என்று குறிப்பிட்டு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
”செலவைக் குறைத்து சேமிப்புகளை அதிகரிக்கும் வகையில் ஒரே வருடத்தில் வருமான வரி விலக்கு மற்றும் ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் ஆகிய இரண்டு வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளை ஒரு தலைமை முன்மொழிவதற்கு அசாத்திய அறிவாற்றலும், மக்கள் மீது அளவுகடந்த அன்பும் இருத்தல் வேண்டும். ஏழை, எளிய, நடுத்தர வர்க்க மக்களின் துயரங்கள் குறித்த ஆழ்ந்த புரிதல் கொண்டிருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒப்பற்ற தலைமை பண்புடைய மாண்புமிகு திரு. நரேந்திர மோடி அவர்களைப் பாரதப் பிரதமராக பெற்றது நாம் செய்த பெரும் பேறு.” என்று எச்.ராஜா பதிவிட்டுள்ளார்
எட்டாண்டுகளாக கூடுதல் வரி விதித்து மக்களை வாட்டி வதைத்ததும் இதே பிரதமர் தானே என்று எதிர்க்கட்சிகள் தரப்பில் குரல்கள் எழுவதையும் கேட்க முடிகிறது.
செலவைக் குறைத்து சேமிப்புகளை அதிகரிக்கும் வகையில் ஒரே வருடத்தில் வருமான வரி விலக்கு மற்றும் ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் ஆகிய இரண்டு வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளை ஒரு தலைமை முன்மொழிவதற்கு அசாத்திய அறிவாற்றலும், மக்கள் மீது அளவுகடந்த அன்பும் இருத்தல் வேண்டும். ஏழை, எளிய, நடுத்தர… pic.twitter.com/bT7YQOmlWr
— H Raja (@HRajaBJP) September 4, 2025
