2 லட்சம் பேருக்கு நோட்டீஸ்! சென்னை மாநகராட்சி அதிரடி!!

 
Ribbon-building Ribbon-building

சொத்து வரி செலுத்தாமல் உள்ள 2 லட்சம் பேருக்கு சென்னை மாநகராட்சி க்யூ ஆர் கோட் மூலம் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளது. 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சொத்து வரி நிலுவையில் உள்ளவர்களுக்கு இந்த க்யூ ஆர் கோடு அனுப்பப்படும்.

க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்து நேரடியாக சொத்து வரியை செலுத்தி விடலாம். நீண்ட காலமாக சொத்து வரி நிலுவையில் உள்ள வணிக கட்டிடங்கள், அடுக்குமாடி கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மாநகராட்சி முடிவு செய்துள்ளது. நோட்டீஸ் அனுப்பியும் வரி செலுத்தாதவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

From around the web