தாய்மொழி தமிழைத் தவிர எதையும் திணிக்க முடியாது! இளம்பெண்ணின் வைரல் வீடியோ!!

 
Young Tamil Girl

எந்த ஒரு மொழியையும் கற்றுக்கொள்ளனும் என்று அதிகாரம் பண்ணுவதற்கு அரசியலமைப்பில் யாருக்கும் இடமில்லை என்று கூறும் இளம்பெண்ணின் வீடியோ சமூகத்தளத்தில் வைரலாகப் பரவிவருகிறது.

”தாய்மொழித் தவிர ஆங்கிலம் உள்ளிட்ட எந்த மொழிகளும் ஒரு தொடர்பு மொழி தான். மற்றவர்களிடம் உரையாடுவதற்காக மட்டும் தான். அவரவர்க்கு பிடித்த மொழியை கம்யூனிகேஷன் தேவைகளுக்காக கத்துக் கொள்வது அவரவர் தனிப்பட்ட விருப்பம், உரிமை.  இதைத் தான் பேசனும் என்று ஆதிக்கம் செலுத்தும் எதையும் நம் மீது திணிப்பது நம் உரிமைக்கு எதிரானது. இந்தி படிக்கனுமா வேண்டாமா என்பது தனிப்பட்ட நபருடைய தனிப்பட்ட விருப்பம். அதை அரசியல் பின்புலத்தைப் பயன்படுத்தி திணிப்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது.

என்னுடைய தாய்மொழி தமிழ், அதில் நான் உறுதியாக இருக்கேன். நான் வெளியூர் போனால், அங்கேயே தங்க நேர்ந்தால் அங்கேயே வாழ வேண்டிய சூழல் வந்தால் அங்கே உள்ள மொழியை கற்றுக்கொள்ளலாம். அது இல்லாமல் இந்த மொழியைக் கற்றுக்கொள்ளனும் என்று அதிகாரம் பண்ணுவதற்கு அரசியலமைப்பில் யாருக்கும் இடமில்லை” என்று வீடியோவில் கூறியுள்ளார்.


 

From around the web