எம்.பி. கூட கிடையாதாம்.. பைல் ரெடி பண்ணவருக்கே பைல் கொடுத்த எடப்பாடி?

 
EPS Amitshah

டிஎம்கே ஃபைல் என்று பரபரப்பு ஏற்படுத்திய பாஜக தலைவர் அண்ணாமலை ஏடிஎம்கே ஃபைலும் ரெடியா இருக்கு என்று சில மாதங்களுக்கு முன்னால் கெத்தாகப் பேசிக் கொண்டிருந்தார். இப்போது டெல்லிக்கு சம்மன் அனுப்பி அழைக்கப்பட்டுள்ளார் என்று கட்சி வட்டாரத்திலே பேசப்படுகிறது.

வந்த அழைப்பை கெட்டியாகப் பிடித்துக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலையி அடாவடிப் பேச்சுக்கள் அனைத்தையும் வீடியோ ஆதாரங்களாகவும் அதை எழுத்து வடிவத்த்திலும் பெரிய ஃபைல் தயார் செய்து அமித் ஷா கையில் கொடுத்துள்ளதாகப் பேச்சு வருகிறது. மேலும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிக்கு தயாராக இருந்ததாகவும் தொகுதிகளைக் கூட அடையாளம் செய்து பட்டியல் கொடுத்ததாகவும் அதெல்லாம் உங்க பார்வைக்கு வந்ததா என்று தெரியல்ல என்றும் போட்டுக் கொடுத்துள்ளாராம் எடப்பாடியார்.

எங்களைச் சொன்னால் பரவாயில்லை எங்க கட்சிககாரங்க தெய்வமா வழிபடும் எம்ஜிஆர், ஜெயலலிதாவை திமுக காரங்களை விட மிகக்கேவலமாகப் பேசியுள்ளார் அண்ணாமலை. அவரைத் தலைவரா வச்சிகிட்டு பாஜக வுடன் கூட்டணி சேர்ந்தா எங்க கட்சிக்காரங்களே திமுகவுக்குத் தான் வாக்க்களிப்பார்கள் என்ற எதார்த்த நிலையைச் சொல்லியிருக்கிறார்.

மேலும், நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி வைத்திருந்தால் பத்து முதல் இருபது இடங்களில் வெற்றி பெற்றிருப்போம் என்பதை இருவருமே ஒப்புக் கொண்டனராம். இதெற்கெல்லாம் காரணம் அண்ணாமலையின் அடாவடி அரசியல் தான் என்பதை முடிந்த அளவு பக்குவமாக  எடுத்துச் சொல்லி விட்டாராம். அண்ணாமலை இருந்தா அதிமுக காரங்களே ஓட்டுப்போட மாட்டாங்கன்னு சொன்னது தான் அமித் ஷாவை அதிர்ச்சிக்குள்ளாகியதாம்.

இது தான் சிக்கலா என்று புரிந்து கொண்டதால் தான் எடப்பாடி குழுவினருக்கு வடை பாயசத்துடன் விருந்து வைத்து வழியனுப்பி வைத்துள்ளாராம். ஆக, அண்ணாமலை எம்.பி.  ஆவதற்கு கூட எடப்பாடி ஒத்துழைக்க மாட்டார் என்பதால் அண்ணாமலை வடகிழக்கு மாநிலங்களுக்கு ஆளுனராக அனுப்பி வைக்கப்படலாம் என்ற பேச்சு எழத் தொடங்கியுள்ளது. மூத்த பத்திரிக்கையாளர் தராசு ஷ்யாமும் அண்ணாமலைக்கு ஆளுநர் வாய்ப்பே அதிகமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் என்றால் தமிழ்நாட்டிலிருந்து பேக்கப் தானே? ஆளுநர்கள் ஆகிவிட்ட மூத்த பாஜ தலைவர்களான இல கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன் எல்லாம் தமிழ்நாடு பாஜகவினரே மறந்து விட்ட பெயர்கள் தானே! சில வருடங்கள் ஆளுநர் என்ற பதவியில் அண்ணாமலை வனவாசம் அனுப்பப்பட்டால் வியப்படைய வேண்டியதில்லை.