வாய்ப்பில்லை ராஜா! சீமானுக்கு முன்னாள் நாதக நிர்வாகி அறைகூவல்!!

நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி தமிழ்நாடு முழுவதிலிருந்தும் வந்திருந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். திமுக மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் போது, நீங்கள் சரியான பாதையை தேர்ந்தெடுத்து கழகத்தில் இணைத்துக் கொண்டதற்கு மனமார பாராட்டி வரவேற்கிறேன். திமுக அரசின் சாதனைகளை மக்களுக்கு நினைவு படுத்தினாலே போதும் 200 அல்ல 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று கூறினார்.
திமுகவில் இணைந்த முன்னாள் நாம் தமிழர் நிர்வாகிகள் தொலைக்காட்சி செய்தியாளர்களிடம் பேசினார்கள். அதில் ஒருவர் பேசும் போது, நான் மெக்கானிக் வேலை பார்த்து வருகிறேன். என் வருமானத்தை எல்லாம் கட்சிக்காக செலவிட்டேன். கடந்த தேர்தலில் 1000 வாக்குகளை சேகரித்தேன்.
தந்தை பெரியார் இல்லையென்றால் நான் படித்திருக்க மாட்டேன். தந்தை பெரியாரை அவதூறு செய்கிறார். ஆர்.எஸ்.எஸ் அடிவருடி ஆகிவிட்டார்.
சீமான் அரசியல் கட்சி நடத்தினால் அனைத்துக் கட்சிகளைப் பற்றிப் பேச வேண்டும். ஏன் திமுகவை மட்டும் விமர்சிக்கிறார்.
ஆட்சிக்கு வர வேண்டும் என்று சீமான் கனவு காண்கிறார். அவர் வார்த்தைகளிலேயே சொல்கிறேன்”வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை”,கீழ்ப்பாக்கத்தில் வேணும்னா வாய்ப்பு இருக்கு.
முதலமைச்சர் தளபதி நல்லாட்சி நடத்தி வருகிறார். நான் கட்சிப் பதவியை எதிர்பார்த்து இங்கு வரவில்லை. நாளை என் பிள்ளைகள், தமிழ் மக்கள் நல்லா இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் தான் திமுகவுக்கு வந்தே என்று கூறியுள்ளா