இனி ரேஷன் கார்டு தேவையில்லை... பொருட்கள் வாங்கலாம்... தமிழ்நாடு அரசு குட் நியூஸ்!

 
Ration-card

தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு இல்லாமல் நியாயவிலைக் கடைகளில் பொருள் வாங்கும் திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ளார். 

அரசு நியாய விலை கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை குறைந்த விலையில் வாங்குவதற்கும் மட்டும் இல்லாமல், ஒவ்வொருவரின் முகவரிக்கு ஆதாரமாகவும் ரேஷன் கார்டு இருந்து வருகிறது. மேலும், குடும்ப அட்டை மூலம், தமிழ்நாடு அரசின் பல்வேறு நலத் திட்டங்களையும் நேரடியாக பெறவும் முடியும். இதனால் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரேஷன் அட்டை முக்கியமாக கருதப்படுகிறது.

Ration-Shop

இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழத்தின் சார்பில் ரூ. 5 கோடி மதிப்பீட்டில் தலா 1,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 2 செயல்முறை கிடங்கு கட்டுவதற்கு காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து அடிக்கல் நாட்டினார். இதில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சக்கரபாணி, நியாய விலை கடைகளில் பயோமெட்ரிக் வேலை செய்யவில்லை என பொதுமக்கள் புகார் அளித்தனர். முதியவர்கள், மாற்று திறனாளிகள் ரேஷன் கடைகளில் யார் பொருட்கள் வாங்க வேண்டுமென யாரை பரிந்துரை செய்கிறார்களோ மாவட்ட வழங்கல் அலுவலர்கள் முடிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

sakkarapani

மேலும், பயோமெட்ரிக்யோடு, கண் கருவிழி மூலம் பொருட்களை பெற சேப்பாக்கம் திருவல்லிக்கேணி, பெரம்பலூர் பகுதியில் தொடங்கப்பட்டுள்ளது என்று கூறிய அமைச்சர் சக்கரபாணி, தமிழக முழுவதும் 35 ஆயிரம் நியாய விலை கடைகளில் கண் கருவிழி பதிவு செய்து அதன் மூலமாக ரேஷன் பொருட்கள் பெற அரசாணை வெளியிடப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது . விரைவில் இந்த திட்டம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.

From around the web