என்ன சொன்னாலும் தப்பாப் போயிடும்.. அண்ணாமலை பகீர் பதில்!!

 
Annamalai

டெல்லிக்கு ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி சந்தித்து உள்ள நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம் கொடுத்துள்ளார்.

அதிமுக பாஜக கூட்டணிக்கான சந்திப்பா இது என்று கேட்ட போது, ஒன்றிய உள்துறை அமைச்சரை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம். உள்துறை அமைச்சர் எல்லோரையும் சந்திக்கிறார். இது குறித்து இப்போது நான் என்ன சொன்னாலும்  அது தப்பாகப் போய்விடும், சந்திப்பு முடிந்த பிறகு அது குறித்து தெரியப்படுத்தலாம்.

 தேசிய ஜனநாயகக் கூட்டணி நடத்திய இஸ்லாமியர்களின் இஃப்தார் விருந்தைப் பார்த்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பொறாமை. திமுகவை வீழ்த்த யார் வேண்டுமானாலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேரலாம், தமிழ்நாட்டில் தற்போது ஐந்து முனைப் போட்டி உள்ளது. இது ஜனநாயகத்திற்குத் தேவையா என்று பத்திரிக்கையாளர்கள் தான் கூற வேண்டும். ஐந்து முனைப் போட்டி மும்முனைப் போட்டியாக மாறுமா என்பதை பார்க்க வேண்டும். என்று பேசியுள்ளார்.