பாஜகவுடன் கூட்டணி இல்லவே இல்லை! அதிமுக திட்டவட்டம்!!

செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று தெரிவித்துள்ளார். 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி வருமா என்ற கேள்விக்கு, கட்சியின் நிலைப்பாட்டை பொதுச்செயலாளர், தலைமைக் கழகம் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் மாளிகையில் அறிவித்து விட்டார். இன்றும் இல்லை நாளையும் இல்லை என்ற அது தான் கட்சியின் நிலைப்பாடு. நாளை இல்லை என்றால் 2026ல் இல்லை. எத்தனை தடவை இதை உங்களுக்குச் சொல்லுவது என்று பதிலளித்துள்ளார்.
பரந்தூர் விமான நிலையம் அமைப்பது தொடர்ப்பான மக்கள் போராட்டங்கள் குறித்து கேட்ட போது, மக்களுக்கு பாதிப்பு வரும் எந்த திட்டமும் கூடாது என்பது தான் அதிமுக நிலைப்பாடு என்று பதிலளித்துள்ளார். டெல்டா மாவட்டத்தில் மீத்தேன் திட்டத்தை திமுக அறிவித்தது. ஆனால் மக்களுக்கு பிரச்சனை என்பதால் கழக ஆட்சியில் தடுக்கப்பட்டு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது என்றார். அதன்படி பார்த்தால், நாங்கள் அறிவித்த திட்டமே ஆனாலும் மக்களுக்கு பாதிப்பு என்றால் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடுங்கள் என்று சொல்லாமல் சொல்லியுள்ளார் ஜெயக்குமார்.