அடுத்ததும் விடியல் ஆட்சி தான்! மக்களுக்கும் சந்தேகமில்லை!!
Jan 11, 2025, 11:26 IST
இன்று சட்டமன்றக் கூட்டத்தில் ஆளுநர் உரைக்குப் பதிலளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அதிமுகவினர் கருப்புச் சட்டை அணிந்து அவைக்கு வந்திருந்தார்கள். கருப்புச்சட்டை அணிந்ததால் அவர்கள் மீது துளியும் வருத்தமில்லை. தமிழ்நாடு வளர்ச்சி அடையக்கூடாது என்று இருக்கும் ஆளுநருக்கு எதிராக கருப்புச்சட்டை அணிந்து எதிர்ப்பை அதிமுகவினர் தெரிவிப்பார்களா என்று கேட்டார்.
செல்லுமிடமெல்லாம் மாணவிகள் அப்பா என்று என்னை அழைக்கிறார்கள். அதில் தெரிகிறது விடியல் ஆட்சியின் வெற்றி. விடியல் ஆட்சி மக்களுக்கானது தானே தவிர எதிர்க்கட்சிகளுக்கானது அல்ல. அடுத்து அமையும் ஆட்சியும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி தான். அதில் எங்களுக்கு இம்மியளவும் சந்தேகமில்லை. மக்களுக்கும் சந்தேகமில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.