புதிய உச்சம்.. ஒரு கிலோ இஞ்சி ரூ. 290.. கோயம்பேட்டில் காய்கறி விலை என்ன.?

 
Koyambedu

கோயம்பேட்டில் வெங்காயம் மற்றும் இஞ்சியின் விலையானது அதிகரித்துள்ளது. 

சென்னை கோயம்பேடு மார்கெட்டுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் சென்னையில் இருந்து வியாபாரிகள் வந்து மொத்தமாக காய்கறிகள், பழங்கள் வாங்கி சென்று விற்பனை செய்து வருகின்றனர். சில்லறை வியாபாரமும் நடைபெறுகிறது.

அந்த வகையில், காய்கறிகளின் வரத்தை பொறுத்து சென்னை கோயம்பேடு சந்தையில் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, பெரிய வெங்காயம் ஒரு கிலோ 34 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், நெல்லிக்காய் ஒரு கிலோ 89 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

Market

குடைமிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

கேரட் ஒரு கிலோ 30 ரூபாய், கொத்தவரை ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், கத்தரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பெரிய கத்தரிக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ அறுபது ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Ginger

கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிந்து விலை வரும் தக்காளியானது ஒரு கிலோ 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் இஞ்சியின் விலையானது தரத்தை பொறுத்து மாற்றம் செய்யப்படுகிறது. ஒரு கிலோ இஞ்சி 200 ரூபாய் முதல் 290 ரூபாய் வரை விற்பனையாகிறது.

From around the web