மர்ம காய்ச்சல்.. 5-ம் வகுப்பு மாணவி பரிதாப பலி.. சோகத்தில் மூழ்கிய கிராமம்!

 
Vaniyambadi

வாணியம்பாடி அருகே மர்ம காய்ச்சலுக்கு 5-ம் வகுப்பு பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கவுகாப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் அரவிந்தன். இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி திவ்யா. இந்த தம்பதிக்கு பிந்து ஸ்ரீ (10) என்ற மகள் இருந்தார். பிந்து ஸ்ரீ, சிக்கனாங்குப்பம் அரசுப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.

Fever

இந்த நிலையில், சிறுமிக்கு கடந்த 3 நாள்களாக காய்ச்சல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சிறுமியை நேற்று முன்தினம் (பிப். 18) அதிகாலை வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு மருத்துவர்கள் முதல் உதவி சிகிச்சை அளித்தனர்.

பின்னர், உடனடியாக மேல் சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தினர். இதைத் தொடா்ந்து, சிறுமியை அவரது பெற்றோா் மற்றும் உறவினா்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

Dead

அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பிந்து ஸ்ரீ நேற்று பரிதாபமாக உயிரிழந்தாா். மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

From around the web