தமிழ்நாட்டில் பரவும் மர்ம காய்ச்சல்... மக்கள் யாரும் அதை பண்ணாதீங்க... எச்சரிக்கும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!!

 
Vijayabaskar

பொதுமக்கள் தாங்களாகவே மருந்தகங்களில் மருந்துகளைப் பெற்று உட்கொள்ளுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. குறிப்பாக சென்னை, மதுரை, நெல்லை உள்ளிட்ட மாநகரங்களில் அதிக அளவில் காய்ச்சலால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாடு சுகாதாரத் துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த காய்ச்சல் 3 நாள்களில் குணமாகிவிடும். ஆனால் இதன் பாதிப்புகள் நீண்ட காலம் இருக்கும் வாய்ப்புள்ளது. காற்று மாசுபாடு இந்த வைரஸ்களுக்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என ஐசிஎம்ஆர் கூறியுள்ளது. 

Flu

மர்ம காய்ச்சல் தற்போது பரவி வரும் சூழலில், உங்களுக்கு காய்ச்சல், சளி அல்லது இருமல் ஆகியவை ஏற்பட்டால் நீங்களாகவே ஆண்டிபாடிகளை எடுத்து கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவேண்டும். இந்த காய்ச்சலால் வரும் இருமல் மூன்று வாரங்கள் நீடிக்கும். இந்த காய்ச்சல் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், 15 வயதுக்கு உட்பட்டவர்களை குறிவைத்து தாக்குகிறது.

இந்நிலையில், பொதுமக்கள் தாங்களாகவே மருந்தகங்களில் மருந்துகளைப் பெற்று உட்கொள்ளுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Self Medication

இது குறித்து அவர் கூறுகையில், “தொடர்ந்து ஒரு மாதமாக குழந்தைகளுக்கு மட்டும்மல்ல பெரியவர்களுக்கும் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. உடனடியாக மக்கள் நல்வாழ்வுத்துறை காய்ச்சல் அதிகமாக இருக்கும் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும். தலைமை மருத்துவமனையில் கூடதல் வர்டுகள் ஏற்படுத்த வேண்டும். காய்ச்சல், சளி, இருமல், உடல்வலியால் அவதி பெரும் பொதுமக்கள் சுயமருத்தும் தவிரக்க வேண்டும் என்று அரசு விளம்பரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்திகிறேன்.

From around the web