பழனி பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கிய இஸ்லாமியர்கள்..! நெகிழ்ச்சி வீடியோ

 
Pallapatti

பள்ளப்பட்டி அருகே பழனி பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் நீர்மோர் வழங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி அண்ணா நகரில் குதுபுதியன் தர்கா அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் பழனி முருகன் கோவில் தைப்பூச விழாவை ஒட்டி பாதயாத்திரை செல்லும் இந்து சகோதரகர்களுக்கு, பள்ளபட்டி இஸ்லாமியர்கள் சார்பில் மத நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் வளர்க்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

Pallapatti

பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு, அரை லிட்டர் வாட்டர் பாட்டில், பார்லே ஃப்ரூட் ஜூஸ், ஹாப்பி ஹாப்பி பிஸ்கட், கால் வலிக்கான டைக்லோக்வின் பிளஸ் ஆயின்மென்ட் மற்றும் பேட்டரி செல்போன் சார்ஜ் செய்வதற்காக பிளக் பாயிண்ட் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

ஏராளமான பக்தர்கள் நடந்து செல்வதால் அவர்களுக்கு கால் வலிக்கு மருந்துகளையும் வழங்கினர். மினரல் வாட்டர் குளிர்ந்த மண்பானை நீர், இளைப்பார சாமியானா பந்தல் அமைத்து கொடுத்து, பள்ளப்பட்டியில் வழியாக பழனி செல்லும் பக்தர்களுக்கு வழங்கி வருகின்றனர்.


பள்ளப்பட்டி ஜமாத்துல் உலமாக்கள் மற்றும் வாட்ஸ் ஆப் குழு தள நண்பர்கள் சார்பாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு, இஸ்லாமியர்கள் வருடா வருடம் இது போன்ற நிகழ்வால், மாற்று மத சகோதரர்களிடையே மத நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் ஏற்படுத்தி வருவது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

From around the web