முருக பக்தர்கள் திருச்செந்தூருக்குத் தான் வருவார்கள்.. அமைச்சர் சேகர் பாபு!!

 
Sekarbabu Sekarbabu

நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, திருச்செந்தூரில் ஜூலை 7ம் தேதி நடைபெறும் ஒருவார விழாவில் பங்கேற்க உண்மையான முருக பக்தர்கள் திரண்டு வருவார்கள் என்று கூறியுள்ளார்.

மதுரையில் ஜூன் 22ம் தேதி இந்து முன்னணி சார்பில் தர்மம் காக்க, அதர்மம் அகற்ற என்ற தலைப்பில் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் நடிகர் ரஜினிகாந்த் ஐ பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார்கள். ஆனால் ரஜினி தரப்பில் எந்தத் தகவலும் இது வரையிலும் இல்லை.

ஜூலை 7ம் தேதி திருச்செந்தூர் முருகன் கோவிலில் பல்வேறு திருப்பணிகள் நிறைவு செய்யப்பட்டு ஒரு வாரம் திருவிழா நடைபெற உள்ளது. மதுரயில் நடைபெற உள்ள இந்து முன்னணியின் மாநாடு குறித்து இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, உண்மையான முருக பக்தர்கள் திருச்செந்தூரில் நடைபெறும் விழாவுக்குத் தான் வருவார்கள். மதுரையில் நடக்கும் நிகழ்வுக்கு செல்ல மாட்டார்கள் என்று கூறினார்.

From around the web