பள்ளி மாணவி கொலை... 9 மாதங்களுக்கு பின் வெளிவந்த திடுக்கிடும் தகவல்!!

அரூர் அருகே பள்ளி மாணவி 9 மாதங்களுக்கு உயிரிழந்த நிலையில் 3 நபர் குறித்து பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த முள்ளிகாடு பகுதியில் வசித்து வருபவர் பெருமாள். இவரது மகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அந்த சிறுமியை மாங்கடை பகுதியை சேர்ந்த 3 பேர் கொலை செய்து விட்டதாக ஒருவர் கூறியிருக்கிறார்.
அதன் அடிப்படையில் பெருமாள் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது கோவிந்தராஜ், மோகன்ராஜ் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில் இப்போது மூன்றாவதாக வெங்கடேசன் என்பவரும் இதில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்ககோரி மாணவியின் பெற்றோர் காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர். அதேநேரம் 3 பேர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.