டி.எம். கிருஷ்ணாவுக்கு எம்.எஸ். சுப்புலட்சுமி விருது கொடுங்க! உயர்நீதிமன்றம் உத்தரவு?
சென்னை மியூசிக் அகடமி சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் சங்கீத கலாநிதி விருது பிரபல இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தனி நீதிபதி ஜெயச்சந்திரன் பிறப்பித்த தடை உத்தரவை நீக்கி நீதிபதிகள் பி.தனபால், எஸ்.எஸ். சுந்தர் உத்தரவு பிறப்பித்தனர்.
எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருது வழங்கப்படக் கூடாது என எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேரன் சீனிவாசன் வழக்கு தொடர்ந்திருந்தார். டி,எம்.கிருஷ்ணா எம்.எஸ்.சுப்புலட்சுமி பற்றி மோசமான வார்த்தைகளில் பேசியுள்ளார் என்றும் தனது பெயரில் அறக்கட்டளை மற்றும் நினைவிடம் அமைக்கக்கூடாது என்று எம்.எஸ்.சுப்புலட்சுமி உயில் எழுதி வைத்திருப்பதாகவும் அவர் தரப்பில் கூறப்பட்டது.
மேல்முறையீட்டு மனுவில் சீனிவாசனின் இந்த வாதங்களை நீதிபதிகள் ஏற்கவில்லை. உயிலில் விருது வழங்கக்கூடாது என்று குறிப்பிடவில்லை என்றும் தெரிவித்தனர்.
டி.எம்.கிருஷ்ணா சமூகநீதிக் கருத்துக்களைப் பேசி வருபவர். அனைத்துத் தரப்பினரும் கர்நாடக இசையை கற்க வேண்டும் என்று செயல்பட்டு வருகிறார். இதனாலேயெ அவருக்கு சென்னை மியூசிக் அகடமி விருத தருவதற்கு எதிர்ப்பு கிளம்பியதாகவும் கூறப்பட்டது. தடைகளைத் தகர்த்து விருதினைப் பெறப்போகும் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.