கொடுத்த காசுக்கு மேலே... எடப்பாடியை பங்கம் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

 
CM Stalin CM Stalin

அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் கட்டுவதா ? என்று கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தில் குதித்துள்ளனர்.

சென்னையில் தொடங்கிய மாணவர்கள் போராட்டம் தமிழ்நாடு முழுவதுமாகப் பரவத் தொடங்கியுள்ளது. எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்தின் போது மாணவர்கள் கருப்புக்கொடி காட்டவும் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வருகிறது.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்துள்ளார். 

கொடுத்த காசுக்கு மேல என்னமா கூவுறான்” என்ற வடிவேலு காமெடி போல, BJP கட்சியினரே ஆச்சரியப்படும் அளவுக்கு “ஃபீல் பண்ணிக் கூவும்” மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் என்று விமர்சித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

கேள்விக்குறிபோல் வளைந்த முதுகா? உரிமைகளுக்காகத் தலைநிமிர்ந்து போராடும் தன்மானமா? மனிதரை மனிதர் தாழ்த்தி, பிற்போக்குத்தனங்களை நோக்கித் தள்ளும் காவிக் கொள்கையா? மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என முற்போக்கு எண்ணங்களால் முன்னேற்றும் கல்விக் கொள்கையா? தமிழ்நாடு விடை சொல்லும்! துரோகக் கூட்டத்தை விரட்டியடிக்கும்! என்றும் கூறியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


 

From around the web