‘அம்மா நான் போறேன்...’ வேலை இழப்பால் கடிதம் எழுதி ஐடி ஊழியர் தற்கொலை!!

 
Suicide

சென்னையில் வேலை இழந்த ஐடி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பாடி டிவிஎஸ் நகரில் வசித்து வந்தவர் விக்னேஷ் (24). இவர், பிரபல தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த ஜனவரி மாதம் இவர் பணியாற்றிய நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொண்ட போது, விக்னேஷின் வேலை பறிபோனது. இதனால், கடந்த ஒரு மாதமாகவே கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

Layoff

இந்த நிலையில், தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக, குடும்பத்தினர் அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், தற்கொலை செய்தவற்கு முன்பு அவர் எழுதி வைத்த கடிதமும் கிடைத்துள்ளது. அதில், தனது முடிவுக்கு வேறு யாரும் காரணம் இல்லை என்றும், மீண்டும் வேலை கிடைக்கும் என்று நம்பிக்கை இல்லை என்பதால் தற்கொலை முடிவை எடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். 

Ambattur

மேலும், தன்னை மன்னித்து மறந்துட வேண்டும் என்றும், ‘அம்மா நான் போறேன்... உடம்ப பாத்துக்கோங்க..’ என்றும் அந்த கடிதத்தில் உருக்கமாக எழுதியுள்ளார். அத்துடன் தனது ஏடிஎம் கார்டு மற்றும் செல்போன் பார்ஸ்வேர்டுகளையும் குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web