நேற்று மோடி இன்று ஸ்டாலின்! வெற்றி யாருக்கு?

சமூகத்தளத்தில் ட்ரெண்டிங் என்பது குறிப்பிட்ட ஒரு கருத்தின் மீது மக்களின் எண்ண ஓட்டத்தை பிரதிபலிப்பதாக இருக்கும். ஆனால் இதுலேயும் பணம் கொடுத்து ட்ரெண்டிங் செய்யப்படுவதான குற்றச்சாட்டும் உண்டு.
தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி ஒதுக்காமல் மும்மொழிக் கொள்கையை ஏற்றால் தான் தரப்படும் என்று ஒன்றிய அமைச்சர் கூறியதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் இந்தித்திணிப்பு எதிர்ப்பு மீண்டும் தலைப்புச் செய்தியாகி உள்ளது.
ஒன்றிய அரசைக் கண்டித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சைக் கண்டித்து, ஒருமையில் பேசி கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து இருந்தார் அண்ணாமலை. கடந்த முறை கோ பேக் மோடி என்று தமிழ்நாட்டு மக்கள் விரட்டியடித்தனர். இனிமேல் கெட் அவுட் மோடி என்று தமிழ்நாட்டு மக்கள் விரட்டுவார்கள் என உதயநிதி பேசியதைக் குறிப்பிட்டு கடுமையாகச் சாடியிருந்தார் அண்ணாமலை.
அண்ணாமலைப் பேச்சைத் தொடர்ந்து கெட் அவட் மோடி ஹேஷ்டேக் இந்திய அளவிலும் உலக அளவிலும் ட்ரெண்டிங் ஆனது. அதற்குப் போட்டியாக இன்று பாஜகவினர் கெட் அவுட் ஸ்டாலின் என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டிங் செய்து வருகின்றனர். இன்றையப் போட்டியில் முந்தப் போவது பிரதமர் மோடியா அல்லது முதலமைச்சர் ஸ்டாலினா என்பது விரைவில் தெரிந்து விடும்.