நவீனப் பேருந்து தயார்!! விஜய் பிரச்சாரம் எப்போது?

 
Vijay Bus Vijay Bus

நடிகர் விஜய் யின் தேர்தல் பிரச்சாரத்திற்காக நவினமாக வடிவமைக்கப்பட்டுள்ள பேருந்து தயாராக இருப்பதாக ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. பனையூரில் இந்தப் பேருந்து தயார் நிலையில் இருப்பதாகவும் செப்டம்பர் 13ம் தேதி திருச்சியிலிருந்து தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தை விஜய் மேற்கொள்ளப் போகிறார் என்றும் தகவல்கள் வந்துள்ளது.

ஓரிரு நாளில் தேர்​தல் பிரச்​சார சுற்​றுப்​பயணம் இறுதி செய்​யப்​பட்​டு, அதி​காரப்​பூர்​வ​மாக அறிவிக்​கப்​படும் என்​றும் கட்சி நிர்​வாகி​கள் கூறியுள்ளனர்.

தேர்​தல் பிரச்​சா​ரத்தை திருச்சியில் தொடங்​கு​வது மட்​டுமே தற்​போது உறுதி செய்​யப்​பட்​டுள்​ளது. திருச்​சியை தொடர்ந்து கரூர், ஈரோடு மாவட்​டங்​களில் பிரச்​சா​ரம் மேற்​கொள்​வதா அல்​லது டெல்டா மாவட்​டங்​களான தஞ்​சை, திரு​வாரூர், நாகை, மயி​லாடு​துறை மாவட்​டங்​களில் பிரச்​சா​ரம் மேற்​கொள்​வதா என்​பது குறித்த ஆலோ​சனை தீவிர​மாக நடை​பெற்று வரு​வதாகவும் தெரிகிறது.

From around the web