210 தொகுதிகளில் வெற்றி பெறுவார் மு.க.ஸ்டாலின்! பாஜக ஆதரவு அரசியல் விமர்சகர் கருத்து!!
2025ம் ஆண்டு தொடங்கியதுமே அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் குறித்த பார்வைகளும் விவாதங்களும் ஆரம்பமாகி விட்டது.
அரசியல் விமர்சகர்கள் தங்கள் கருத்துக்களை தொலைக்காட்சி விவாதம் மற்றும் யூடியூப் சேனல்களில் தெரிவித்து வருகிறார்கள். பாஜக ஆதரவாளார் ரவீந்திரன் துரைசாமி ஜீவா டுடே வலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்துள்ளார். தமிழ்நாட்டின் தற்போதைய கூட்டணி கள நிலவரத்தை அலசிப்பேசியுள்ள ரவீந்திரன் துரைசாமி, மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவையும் குறிப்பிட்டுள்ளார்.
திமுக கூட்டணி 45 சதவீதம் வாக்குகளைப் பெறும் எனவும், விஜய்க்கு 6 சதவீதம் வாக்குகளே கிடைக்கும் என்றும் கூறியுள்ளவர், திமுகவுக்கு 210 தொகுதிகள் வரை கிடைக்கும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் தன்னுடைய கணிப்பு 90 சதவீதம் சரியாக இருந்தது என்றும் அவர் கூறியிருக்கிறார்.
ரவீந்திரன் துரைசாமி இந்து முன்னணியிலிருந்து வந்தவர், இன்னமும் பாஜக ஆதரவாளர், மோடியின் தீவிரத் தொண்டர் என தன்னை அடையாளப் படுத்திக் கொள்ளும் ரவீந்திரன் துரைசாமியே திமுக பெரும் வெற்றியைப் பெறும் என்று கூறியிருப்பது பாஜக, அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.