தாயுமானவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்? தமிழ் நாளிதழ் பாராட்டு!!

 
CM Stalin

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் குழந்தைகள் நலத்திட்டத்தைப் பாராட்டி தினமணி நாளிதழ் ”தமிழகம் பெருமைப்படலாம்” என்ற தலைப்பில் முகப்புக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் குழந்தைகள் நலனுக்காக தமிழ்நாடு அரசு எடுத்து வரும் முயற்சிகளைப் பட்டியலிட்டுள்ளது.

இந்த நாளிதழ் கட்டுரையை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”ஒரு தாய்மார் கருவுற்ற காலம் முதல், அவர் பெற்ற குழந்தை பள்ளி, கல்லூரி செல்லும் வரை ஒவ்வொரு நிலையிலும் பார்த்துப் பார்த்து அக்கறையுடன் அத்தனை தேவையையும் நிறைவேற்றுவதற்கு திராவிட மாடல் அரசு பாடுபடுவதற்கான பயனும் பாராட்டும் இதோ! பெருமை கொள்கிறேன்... ஊக்கம் பெறுகிறேன்!!” என்று பதிவிட்டுள்ளார்.

மாணவ மாணவியர்களால் “அப்பா” என்று அன்போடு அழைக்கப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குழந்தைகள் நலனில் காட்டும் அக்கறையால்  தாயும் ஆனார் என்று சொன்னால் மிகையல்ல தானே!


 

From around the web