எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ஐ பெரியசாமி பதிலடி!!
Jan 23, 2025, 07:17 IST

100 நாள் வேலைத் திட்டத்திற்காக மக்களுக்கு 2 மாத ஊதியம் வழங்கப்படவில்லை. ஜனவரி மாதம் வேலை கொடுக்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது சரமாரியான குற்றச்சாட்டுக்களை அடுக்கி இருந்தார்.
அதைத் தொடர்ந்து அமைச்சர் ஐ.பெரியசாமி எடப்பாடி பழனிசாமி டெல்லி உத்தரவுப்படி தான் அறிக்கை வெளியிடுகிறார் என்று விமர்சித்துள்ளார்.
”புயல் நிவாரணம், கல்வி நிதி, 100 நாள் வேலைக்கான நிதி ஆகியவற்றை ஒதுக்காத மத்திய பாஜக அரசு மீது தமிழ்நாட்டு மக்கள் கோபமாக இருப்பதை மடைமாற்ற டெல்லி உத்தரவுப்படி அறிக்கை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி” என்று அமைச்சர் ஐ.பெரியசாமி அறிக்கையில் கூறியுள்ளார்.