அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி!

 
Duraimurugan

அமைச்சர் துரைமுருகனுக்கு இன்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இதில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1,23,689 வாக்குகளை பெற்றுள்ளார். அவர் 67,446 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதால் அக்கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விக்கிரவாண்டி தொகுதியில் பல்வேறு இடங்களில் பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் திமுகவினர் கொண்டாடி வருகிறார்கள். 

MKS

அதேபோல அண்ணா அறிவாலயத்திலும் திமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அண்ணா அறிவாலயம் வந்த திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அங்கு திரண்டிருந்த தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சென்னை அண்ணா அறிவாலயம் வந்திருந்த அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. 

DuraiMurugan

இதையடுத்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவசர சிகிச்சைப்பிரிவில் அமைச்சர் துரைமுருகனை அனுமதித்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.

From around the web