சென்னையில் லேசான நிலநடுக்கம்.. பீதியில் உறைந்த பொதுமக்கள்!
சென்னை அருகே லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை அருகே லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவில் 3.9 ஆக பதிவாகி உள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து கிழக்கு, வடகிழக்கு திசையில் 58 கி.மீ தொலைவில் 10.கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இந்த லேசான நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்தனர்.
முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் 8-ம் தேதி செங்கல்பட்டு மகேந்திரா வேர்ல்ட் சிட்டி மற்றும் அருகே உள்ள அஞ்சூர், புளிப்பாக்கம், பரனூர் உள்ளிட்ட பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. மேலும், செங்கல்பட்டை அடுத்துள்ள ஆம்பூர், திருப்பத்தூர், வாணியம்பாடியிலும் நில அதிர்வு ஏற்பட்டது.
Earthquake of Magnitude:3.9, Occurred on 14-03-2024, 20:43:05 IST, Lat: 13.84 & Long: 79.91, Depth: 10 Km ,Location: 58km ENE of Tirupati, Andhra Pradesh, India for more information Download the BhooKamp App https://t.co/eMEMA3rSLo@KirenRijiju @Dr_Mishra1966 @ndmaindia… pic.twitter.com/fNAZHyzNrU
— National Center for Seismology (@NCS_Earthquake) March 14, 2024
இது ரிக்டர் அளவில் 3.2ஆக பதிவான நிலையில், அங்கிருந்த பெரும்பாலான மக்களால் இதை உணரவே முடியவில்லை. இந்த நில அதிர்வு ஏற்பட்டு சில மாதங்கள் ஆன நிலையில் மீண்டும் இப்போது சென்னையில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.