திடீரென சாலையில் சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்த மெட்ரோ ரயில் பணி தடுப்புகள் - சென்னையில் பரபரப்பு

 
Metro

குமணன்சாவடியில் மெட்ரோ பணிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகள் சரிந்து விழுந்ததில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது.

சென்னை கிண்டியில் இருந்து பூந்தமல்லி வரை தற்போது மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளுக்காக இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

Metro

இந்த நிலையில் குமணன்சாவடியில் பகுதியில் மெட்ரோ பணிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகள் ஒருபுறமாக சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்தது. இதில் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டி ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. 

அவரை உடனடியாக அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், அவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதையடுத்து மெட்ரோ ரயில் கட்டுமான ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலையில் விழுந்து கிடந்த இரும்பு தடுப்புகளை அகற்றினர். 

Metro

அதிக பாரம் கொண்ட இரும்பு தடுப்புகளை சிறிய கம்பிகளில் நிறுத்தி வைப்பதால் இத்தகையை விபத்துக்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

From around the web