அரசு ஊழியர்களுக்கு தித்திக்கும் செய்தி.. 4 சதவீத அகவிலைப்படி உயர்வு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

 
Govt Employees

தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 46 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையை பரிசீலித்து ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும் போதெல்லாம் உடனுக்குடன் தமிழ்நாடு அரசும் அதை பின்பற்றி அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை செயல்படுத்தப்படும் என்று ஏற்கனவே அறிக்கை வெளியிட்டிருந்தது.

MKS

அதனை தொடர்ந்து, தற்போது 42 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் 46 சதவீதமாக உயர்த்தி வழங்கிட தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 இலட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு 2546.16 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும். எனினும், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

GO

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்ந்தது. அதன்படி 42 சதவீதத்திலிருந்து தற்போது 46 சதவீதமாக அகவிலைப்படி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web