5-வது மாடியிலிருந்து குதித்த மருத்துவ மாணவி.. காதல் தோல்வியால் எடுத்த விபரீத முடிவு

 
Kanchipuram

தனியார் மருத்துவக் கல்லூரி மாணவி 5வது மாடியில் இருந்து குதித்து  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூர் பகுதியில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மீனாட்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவ கல்லூரியில் பயிலும் மாணவ - மாணவிகள் பெரும்பாலும் அங்கேயே உள்ள மாணவ - மாணவிகளுக்கான விடுதிகளில் தங்கி உள்ளனர்.

Kanchipuram

விடுமுறை நாளான நேற்று இரவு விடுதியின் 5-வது மாடியில் இருந்து மாணவி ஒருவர் அழுது கொண்டே கீழே குதிப்பதற்காக நின்றுள்ளார். இதைப் பார்த்த சிலர் உடனடியாக மருத்துவமனை நிர்வாகத்திற்கும் பாதுகாவலர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். இருப்பினும், அதற்குள் அந்த மாணவி 5-வது மாடியில் இருந்து கீழே குதித்தார்.

இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கு இருந்தவர்கள் மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பெயர் ஷெர்லி என்பதும், அவர் எம்பிபிஎஸ் இறுதி ஆண்டு படித்து வந்தார் என்பதும் தெரியவந்துள்ளது.


முதற்கட்ட விசாரணையில் அவர் காதல் தோல்வியால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இருப்பினும் இதுதொடர்பாக சக மாணவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஐந்தாவது மாடியில் இருந்து மாணவி குதிக்கும் அந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

From around the web